Nainathivu Nainativu நயினாதீவு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சப்த தீவுகள் என அழைக்கப்படும் ஏழு தீவுகளில் ஒன்று ஆகும். இது நாகதீபம் (சிங்கள மொழியில், நாகதீப) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்த கோயில் "நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில்" என்றே பெயர் பெற்றதாகும். இந்த கோயிலின் அண்மையில் ஒரு சிறிய பௌத்த விகாரை உள்ளது. இதனை நாகவிகாரை என்று அழைப்பர். இலங்கையிலுள்ள பௌத்த சமயத்தவர் கௌதம புத்தர் இந்தத் தீவுக்கு வருகை தந்ததாக நம்புகிறார்கள். இந்த விகாரையில் சில பௌத்த பிக்குகள் உள்ளனர். இவர்களைத் தவிர இந்த தீவில் வரலாற்று ரீதியாக வசிக்கும் மக்கள் அனைவரும் தமிழர்களாகும். Users who are followed by Nainathivu